மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Kanagasabai
July 16, 2016
- Born in
- Kantharmadam
- Lived in
- Kantharmadam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கனகசபை அவர்கள் 16-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கனகசபை(இளைப்பாறிய பிரதம சிறாப்பர்- யாழ். மாநகரசபை, நிதி ஆலோசகர்- இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராஜமனோகரன்(முகாமையாளர்- வர்த்தக வங்கி திருநெல்வேலி), இராஜமோகன்(Software Developer- Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராசம்மா, இராசநாயகம்(நொத்தாரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரஜனி(ஆசிரியை- சைவப்பிரகாச வித்தியாலயம் கந்தர்மடம்), சுஜித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தம்பிராசா, விஜயகுமாரி, சாந்தமலர், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், நடராசா(தெல்லியூர்) கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரியந்தி(மாணவி- வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), ஆரபி, ஆதிரை, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 07, குமாரசாமி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

