1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ramalingam Thayapararasan
Age 57November 18, 1960 – October 7, 2018
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் தயாபரராசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை விட்டு பிரிந்து ஆண்டு ஒன்றானாலும்,
எங்கள் எல்லோர் மனங்களிலும்
ஒளிவீசும் அணையா விளக்கே
சிரித்துப்பேசி எம்மை ஏமாற்றிச் சென்றதும் ஏனோ?
என் கடைசி காலம் வரை துணை இருப்பீர்கள் என்றிருந்தேன்,
ஆனால் பாதியில் எம்மை தவிக்கவிட்டு பறந்ததும் ஏனோ?
பிள்ளைகளை நினைப்பேனோ, வேதனையை மறப்பேனோ,
துன்பத்தில் தினமும் வாடுகின்றனே!
இவ்வுலகுக்கு எமை தந்த அப்பாவே
தக்க தருணத்தில் எமை தூக்கிவிட துணை நின்ற அப்பாவே,
எமக்கு வாய்த்த நல்ல நண்பரும் எம் தந்தையே!
உங்களுடன் வாழ்ந்த இனிய நினைவலைகள்
பாசமழை பொழிந்து எம்மை நேசமாய் காத்து வந்த எம் அப்பாவே!
வீரத்துக்கும் அப்பாவே, அழகுக்கும் அப்பாவே,
பாசத்தின் இமையமே, அழியா உயிரும் நீங்களே!
வேரற்ற மரம் போல் வேதனையால் துடிக்கின்றோம்
எங்கள் நெஞ்சை விட்டு அகலாத அப்பாவே...
உங்களுடன் வாழ்ந்த இனிய நினைவழைகள்
எம்மை வாட்டி வதைக்கின்றன!
நீங்கள் பிரிந்து ஓராண்டு ஓடிப்போனது இன்னமும்
நம்பவே முடியாமல் நாங்கள் இங்கே தவிக்கின்றோம் அண்ணா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பெருங்காடு பறிமுத்து மாரிஅம்மனை வேண்டி தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...
நீங்காத உங்கள் நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர், மைத்துனி...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

