நினைவஞ்சலி

In loving memory of
Ramanathar Marimuththu
Age 69August 4, 1926 – February 6, 1996
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Pungudutivu 1st Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் மாரிமுத்து அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயா! ஆண்டுகள் இருபத்தி ஒன்றை கடக்கின்றது
உங்கள் நினைவுகள் நெருங்கியே வருகின்றது
உங்கள் நினைவு நாட்கள் மட்டுமே நினைவூட்டுகின்றது
நீங்கள் மரித்துப் போனதை
நாட்கள் தினம் நகர்ந்து போகும்
காணியாற்றில் நீங்கள் நட்டமரம் கூட
ஒரு நாள் பட்டுப் போகும்
எங்கள் இளமையும் முதுமையாய் வளர்ந்து போகும்
ஆனால் உங்கள் நினைவுகள் மட்டும்
எப்போதும் எங்களின் இளமையாய் செழித்திருக்கும்
என் நினைவில் நிற்கும் முதல் பதிவே
உங்கள் தோள் மீது அமர்ந்து காணியாற்று
விளையை உற்று நோக்கியது தான்
இப்போதும் அதே தோள்களில் அமர்ந்தே
உலகை வலம் வருவதாய் உணர்கிறேன்!
ஐயா கேட்டது எல்லாம் கிடைக்கும்
வரம் காணப் பெற்றேன்
தந்தையாய் நீங்கள் கிடைத்த பிறகு
கடலின் அலைகள் கரையை தொடுவது போல்
நிழலில் தெரிந்தும் உணர்வில் தந்தும்
கண் உறங்கிடும் நேரத்தில் விழிமூடா நினைவுகள்
தந்தை எனும் வேகத்தின் அழியா சாட்சிகள்
தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும்
கைபிடித்து பாதை காட்டிடும் பாசம்
மாறா ஐயாவே விழிகள் வாழ்க்கை உணர்த்திய அன்பின்
வழியில் நான் வெற்றியை மட்டும் கண்ட பயணம் நரைத்த
பின்னும் இளமையான என் ஐயாவின் நெஞ்சம்
உன் நிழலில் நான் இளைப்பாறுகின்றேன்- உன்
வியர்வை சிந்தி பசியாற்றினாய் ஐயா உடலுக்குள்
இறைவன் தங்க இதயத்தை வியர்வை வாசம் தந்த
உன் உதிரத்தால் உணர்வுகளை கற்றுத் தந்தது
அன்பின் உலகம் ஐயா! ஐயா!!
எங்கள் அன்புத் தெய்வமே
எங்கள் அன்பு ஐயாவே
நொடிப் பொழுதில் எங்களை
நோக விட்டு சென்று விட்டீர்கள்!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது- உங்கள் திருமுகம்
எங்களை விட்டு மறையுமா மறுக்குமா!
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் குலதெய்வமாம் மனோண்மணியை
பிரார்த்திக்கும் அன்பு மனைவி, மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
— மஞ்சுளா தேவராஜன்(மகள்- பிரித்தானியா)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

