2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasaratnam Santhakumar
Age 47February 20, 1967 – January 22, 2015
- Born in
- Pallampulam
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் சாந்தகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அறிவும் அடக்கமும்
ஆற்றல்கள் பலவும் தன்னகத்தே கொண்டு வாழ்ந்தவரே!
பாசமாய் உங்கள் மனைவி, பிள்ளைகளுடன் வாழ்வில்
அகமகிழ்ந்திருந்ததை கண் வைத்தது யாரோ?
எமக்கு பார்த்துப் பார்த்து பலதும் செய்தீர்களே
பாதியிலே உங்கள் வாழ்வு முடிய கண் வைத்தது யாரோ?
அப்பா அப்பா என எல்லாவற்றிற்கும் தேடும் பிள்ளைகளை
தேற்றும் வழி தெரியாது தவிக்கின்றேனே!
எத்தனை ஆசைகள்! எத்தனை கனவுகள்!
எல்லாம் ஒரு நொடியிற்குள் நொருங்கிப் போனதே
இது தான் வாழ்க்கையென எழுதிவைத்த இறைவனின்
தத்துவங்கள் புரிந்தும் தவிக்கின்றதே எங்கள் உள்ளம்!
ஈராண்டு ஆகியும் ஆறவில்லையா மனமென்று
கேள்விகள் கேட்போர் ஆயிரம்!
மாண்டவர் வருவதில்லை மனதை ஆற்றிவிடு என்று
அறிவுரைகள் கூறுவோர் ஆயிரம்!
ஈராண்டுகளென்ன ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அன்பினால் இணைந்த நெஞ்சம் அணுவளவும் மாறாது.
உங்கள் ஆத்மா சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நீங்காத உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள்,
உறவினர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

