நினைவஞ்சலி

In loving memory of
Rathinam Nesakumaran
Age 52January 25, 1957 – October 20, 2009
- Born in
- யாழ் தாவடி வடக்கு
- Lived in
- Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceRemembering: Rathinam Nesakumaran · Arunthavamalar Nesakumaran
யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் நேசகுமாரன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Somma Campagna யை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருந்தவமலர் நேசகுமாரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றெடுத்துப் பெயர் சூட்டி பேரழகாய்த் தாலாட்டி
கற்றவராய் உலகத்திலே எமை வாழவைத்த தெய்வங்களே!
மண்ணிலே பெருமை மிக்க மானிடரை உருவாக்கி
புண்ணியராய் இவ்வுலகின் புகழோடு வாழ்ந்தவர்களே!
அன்பு முகம் எங்கள் நெஞ்சில் அழகாக நிலைத்திருக்க
எங்களை விட்டு நீங்கள் எத்தூரம் சென்றீரோ!
பேரக் குழந்தைகளை ஆரத்தழுவிய உங்கள்
பேரன்பை இன்றும் நாம் மறக்கவே முடியவில்லை
உங்களைப் போல் தெய்வங்களை இவ்வுலகில் கண்டதில்லை!
பொங்குகின்ற கண்ணீரைத் துடைப்பதற்கும் யாருமில்லை
இறைவனின் பாதமலர் சென்றடைந்து
பேரானந்தப் பெருவாழ்வில் பேறுபெற்று வாழ்கவென்று
ஆராதனை செய்து அடிதொழுது நிற்கின்றோம்
ஆத்ம சாந்திக்காக அனைவரும் வணங்குகின்றோம்!!!
உங்கள் பிரிவால் துயருறும் கும்பத்தினர்....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

