1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rathinam Vaikunthavasan
Age 56November 5, 1952 – July 1, 2009
- Born in
- Ariyalai
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் அரியாலை கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் வைகுந்தவாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னைத் தமிழ்மண்ணில் கலைமகள் கோவில்கொண்ட
அரியகலைகள்நிறை அரியாலையூரில்
இரத்தினம் செல்வமணி தம்பதிக்குத்
தலைமகனாய் தன்நிகரில் கலைமகனாய்
தரணியிலே வந்துதித்த வாசமலரே வைகுந்தவாசனே!
அன்புத்தாய்க்கோர் இன்பப்பெருக்காய்
அறிவுத்தந்தைக்கோர் அருமைமகனாய்
அணங்கு அன்னலட்சுமிக்கோர் அன்புக்கணவனாய்
ஆணிப்பொன் முத்துக்கள் மூன்றுபெற்று
பேணிவளர்த்த அன்புத்தந்தையானாய்
அண்ணனாய், மாமனாய், மைத்துனனாய்
பெரியப்பாவாய், நண்பனாய், சகலனாய்
பன்முக கலைஞனாய் எல்லாமாகி
பரிணமித்த சுடரொளி நீ
எத்துயர் வந்தாலும் பொங்கிவழியாமல்
புலனடக்கம் கொள்பவன் நீ
அன்பின் அகராதியாய்
அறிவின் திறனொளியாய்
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் நிறைகுடமாய் திகழ்ந்தவன் நீயன்றோ!
செதுக்கிய செந்தமிழ்ப் பண்பும் புன்சிரிப்பும்
உன் தூரிகை தவழும் ஓவியமும்
பௌர்ணமியாய் மிளிர்ந்தது அன்று
அந்த நினைவுகள் ஒவ்வொன்றாய் ஓடிவந்து
நெஞ்சில் இன்னும் உதைக்கிறதே
உனைஇன்று பாதிவழியில் பறிகொடுத்து
பாசத்துக்காய் ஏங்குகிறோம்...
விழிசொரியும் உறவுகளாய் விம்மி அழுகின்றோம்
ஐயா நீ விண்ணுலகு சென்று இன்றோடு
வருடமொன்று ஆனதுவோ
நடந்ததெல்லாம் நேற்றுப்போல் எமக்கு இன்றும்
நெஞ்சில் நிழலாடுதைய்யா
ஆண்டொன்று ஆனபோதும்
அழியாது உன் நினைவலைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

