5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ravichandran Chitradevi
Age 53April 2, 1962 – January 2, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Urumpiray, Colombo, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், கொழும்பு, கனோவர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.திருமதி பொன்னையா அவர்களின் அன்பு மகளான ரவிச்சந்திரன் சித்திராதேவி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்றது ஏனோ?
ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போல் அன்பு கொள்ள யாருமில்லை!
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

