1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ruban Rukishnan
Age 4May 9, 2012 – April 1, 2017
- Born in
- Sweden
- Lived in
- Sweden
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவீடனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபன் ருகிஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீண்டும் நீ வருவாயா மகனே ருகிஷ்ணா....!
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்...!
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
கருவறையில் இருந்து இறங்கி
கல்லறை நோக்கிச் சென்று
ஓராண்டு ஆனதையா!
நீ இந்த மண்ணில் மீண்டும்
வந்து பிறக்க வேண்டும் என்று
இறைவனை வேண்டி ஏக்கத்துடன்
எதிர்பார்த்து நிற்கின்றோம் அப்பா அம்மா..!
— அப்பா, அம்மா
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

