நினைவஞ்சலி

In loving memory of
S.Soruban, S.Suruthiyan
May 13, 2009
- Born in
- Jaffna
- Lived in
- Tharmapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் கச்சேரியடியிப் பிறப்பிடமாகவும் தர்மபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து அமரர்களான சிவப்பிரகாசம் சொரூபன், சொரூபன் சுருதியன் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
எங்கள் அருந்தவக்குஞ்சே,
அழகு ததும்பும் ஆசை செல்வமே, சுருதியனே
எங்கள் கண்மணியே எங்கு சென்றாய் எம்மை விட்டு.
உன் தந்தையின் பிரிவால் வாடும் அன்னைக்கு
ஆறுதல் கொடுத்த அன்புருவே,
உன் கொஞ்சும் மொழியாலே
அன்னையை அரவணைத்த இளம் குஞ்சே,
அன்பைக்காட்டி, உன் தங்கையை
மகிழ வைத்த அன்புச்செல்வமே,
உன் ஆசை முகம் பார்த்து, உன் செல்ல மொழி கேட்டு
ஆண்டு ஒன்று ஆனதன்றோ.
உன் அன்பு முத்தம் தேடி
அன்னையவள் தவியாய் தவிக்க,
அண்ணா அண்ணா என்று தங்கையவள் தேடுகையில்,
எட்டாத கனியாகி எமக்கு கிட்டாமல் போனாயே
தாயின் துயர் துடைக்க வருவாயோ.
பக்குவமாக பார்த்திட பல சொந்தம் பக்கமிருந்தும்
பாதகர்களின் கொடுஞ்செயலால்
பாலகனே உன்னை இழந்தோம்.
அன்பின் இருப்பிடமாய், பண்பின்
உறைவிடமாய், பாசத்தின் பிறப்பிடமாக,
அழகின் திருவுருவாக இம்மண்ணில் வாழ்ந்திட்ட
உன் தந்தையின் பிரிவால் துயருற்று,
தந்தையிடமே சென்றாயோ கண்ணே.
மூர்க்கர்களின் முக அழிப்பில்
முத்தான செல்வமே நீயும் மறைந்தனையோ,
உன்னோடு சேர்ந்து விவேகன், நளாயினி,
தமிழவள், சிவசோதிமாமி
ஒரே இடத்தில் மடிந்தீர்களே.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நாம் இழந்த நம் சொந்தங்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்
— என்றும் உங்கள் பிரிவால் துயரத்தில் வாடும் - உங்கள் அன்பு உறவுகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

