Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sabarathinam Tharmarathinam

In loving memory of

Sabarathinam Tharmarathinam

Age 66August 13, 1949 – August 11, 2016

Born in
Alvai south
Lived in
Alvai south

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் தர்மரத்தினம் அவர்கள் 11-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் தர்மவதி தம்பதிகளின் ஏகப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சாரதாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், மகேஸ்வரி, மற்றும் தணிகாசலம், இராஜேஸ்வரி, நவரத்தினம், தவமணி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, நல்லம்மா, செல்வராசா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

யோகரத்தினம், இராஜேஸ்வரன், இராஜவரோதயன், கனகரத்தினம் விஜயராஜா, அழகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரதாவதி விஜயநாதன், வெற்றிவேல்(ஓய்வுபெற்ற அதிபர்), மணிவர்ணன்(பிரதம எழுதுவினைஞர்- கரவெட்டி பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரதி, சுசிகலா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

நிருத்திகா லிங்கனதாஸ்(முகாமைத்துவ உதவியாளர்- நகரசபை, பருத்தித்துறை), துஷ்யந்தன்(DD தொலைக்காட்சி), சிந்துஜன்(யாழ் பல்கலைக்கழகம் புதுமுகமாணவன்), ஹீர்த்தனா(வவுனியா- பல்கலைக்கழக மாணவி), கேசவன், ஆராதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜயநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புச் சகலனும்,

செந்தூரன்(விரிவுரையாளர்- வவுனியா பல்கலைக்கழகம்), குமரன்(பொறியியலாளர்- லண்டன்), துவாரகன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்வாய் பங்குவேம்படி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.