மரண அறிவித்தல்

In loving memory of
Santhirasekarampillai Parameswari
Age 76October 1, 1941 – July 15, 2018
- Born in
- Inuvil East
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை பரமேஷ்வரி அவர்கள் 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கமலராணி(பிரான்ஸ்), ரஞ்சினிதேவி(கொழும்பு), மனோகரன்(கொழும்பு), சிவகுமார்(பிரான்ஸ்), மகாலக்ஷ்மி(சுவிஸ்), கிருஷ்ணரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற யோகம்மா, சந்திராதேவி, இந்திராதேவி, காலஞ்சென்ற கலமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, யோகேஸ்வரன், சுஜீத்தா, சுமித்ரா, யோகேஷ்வரன், மோஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், நாகராஜா மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான லோகநாதன், போசுராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபா- நிஷாந்தன், துஷ்யந்தன், துஷ்மிலன், பிரவீன், குணாளன், கெளஷிகன், லக்ஷிகா, ராகுல், சுபாங்கி, சுஜன், கிரிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-07-2018 திங்கட்கிழமை, 17-07-2018 செவ்வாய்க்கிழமை, 18-07-2018 புதன்கிழமை ஆகிய தினங்களில் 143 5/5 Messenger St, Colombo என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 19-07-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை ஜெயரட்ன மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

