மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathi Nagarasa
May 19, 2016
- Born in
- Pandatharippu
- Lived in
- Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை பத்திரகாளி கோயிலடியை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி நாகராஜா அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறி(சுவிஸ்), நவநீதன்(அவுஸ்திரேலியா), தபேஸ்(ஜெர்மனி), ஜெயலட்சுமி, ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், துரைராசா, மற்றும் கந்தசாமி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கவேல், சுரேஸ்(இலங்கை), விஜயா(சுவிஸ்), சசி(இந்தியா), ரஞ்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெசிக்கா, சிந்துரன்(சுவிஸ்), ராஜு, தீபக் ராஜ், தரணிக்கா(இந்தியா), டனுசியா, கேனுஜன், துளசி, தான்சிகா, பிரதாஸ், அனுஸ்கா, டியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பத்திரகாளி கோவிலடி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

