7ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sarathambikai Perinbanathan
Age 54May 5, 1956 – May 8, 2010
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இல்லம் என்னும் கோயிலின் தெய்வமாய்
அன்பு என்னும் பள்ளியின் ஆசிரியையாய்
நேர்மை என்னும் பாதையின் சாரதியாய்
சேவை என்னும் வார்த்தையின் இலக்கணமாய்
நட்பு என்னும் தோட்டத்தின் விருட்சமாய்
அறிவுரைகள் பல கூறி எம்மை நல்வழி நடத்தி
எங்கள் நெஞ்சத்தில் நிறைந்து விட்ட
அன்பு தெய்வமே அம்மா!
எத்தனை ஆண்டுகள் பல கடந்தாலும்
நாம் இப் பூமியில் வாழும் வரை உன் நினைவுகள்
எம்மை விட்டு அகலாமல் வாட்டி வதைக்குது அம்மா!
அன்புடனும் பாசத்துடனும் எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!
எம்மை எல்லாம் ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் பெற்ற தாய்யாகிடுமோ அம்மா?
உங்களைப் போல் அன்பு கொள்ள யாருமில்லை
ஏழு ஆண்டுகள் சென்றாலும் உங்கள்
பாசத்திற்கு பட்ட கடன் தீராது அம்மா!
உடல் மட்டும் தான் பிரிந்தது ஆனால்
முழு நிலவாக எம்முடன் தான் இருக்கின்றீர்கள் அம்மா!
உன் ஆத்மா சாந்தியடைய எமது கண்ணீரை
உனக்கு காணிக்கையாய்ச் சமர்ப்பித்து
இறைவனை வேண்டுகின்றோம்!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்பின் பிரிவால் வாழும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள்,
சகோதர சகோதரிகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

