10ம் ஆண்டு நினைவஞ்சலி

Saravanai Kanthasamy
Age 71
- Born in
- Vaddukottai
- Lived in
- Vaddukottai, Anaikottai, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதாயகத்தில் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணை கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய் எம்மோடு
வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள்
எல்லாம் நித்தம் நினைவில்
வந்து வந்து எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா அமைதி பெற
இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

