31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sathasivam Loganathan
Age 59October 30, 1960 – March 25, 2020
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஜோனாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் லோகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
தொட்டிலிலும் தோள்மேலும் தூக்கியெமை தங்கத்
தட்டில்தான் சோறிட்டு தங்கநிலாதான் காட்டி
பொட்டிட்டு பூச்சூட்டி பூவுலகில் பேரெடுக்க
பட்டதுன்பம் யாரறிவார் யாமறிவோம் அப்பாவே
பார்போற்ற பெற்றெடுத்து பண்போடு அறிவூட்டி
சீர்சிறக்க வாழ வைத்து செல்வங்களும்சேருவித்து
ஊருலகு ஓடவைத்து உயரத்தில் ஏற்றி விட்டு
பேரெடுக்க வைத்த தெய்வம் பேசாமல் போனதென்ன
நாவெடுத்து நாம் வாழ்த்த நல்வழி நமக்களித்த உமை
சாவெடுத்து போனதுவோ அதுவும் சரித்திரத்தில் ஆனதுவோ
பாவெடுத்து வருவோமென பரமனுக்கும் பொறுக்கலையோ
பூவெடுத்து போற்றுகின்றோம் பெருமானடி போய்ச்சேர்வாய்
அன்புடன் மனைவி, பிள்ளைகள்,
மருமகன், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்.
சாந்தி!சாந்தி!சாந்தி!
25-03-2020 திங்கட்கிழமை அன்று சுவிட்சலாந்தில் எம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்த எங்கள் குடும்பத்தலைவனின் மறைவுசெய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி, சமூகவலைத்தளங்கள், இணையங்கள் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் தந்த அனைத்து உறவினர்கள், நண்பர்களுக்கும் குடும்பத்தினர் சார்பில் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

