3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sathiyanathan Kobikanthan
Age 22December 3, 1993 – August 24, 2016
- Born in
- Mullai Puthukkudiyiruppu
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceRemembering: Sathiyanathan Kenugen · Sathiyanathan Kobikanthan
சத்தியநாதன் கோபிகாந்தன்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கோபிகாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
சத்தியநாதன் கேனுகன்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கேனுகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மார்கழிப் பூக்களாய் மதி நிலவாய்
மலர்ந்த எம் மொட்டுக்களே
ஆண்டு மூன்று முடிந்ததையா- ஆனால்
இன்று தான் என் செல்வங்கள் சொல்லிச்
சென்றது போல் உள்ளது.
என் செய்வேன் செல்வங்களே- விதி
விளையாடியதா எம் வாழ்வினில்
பட்டாம் பூச்சிகளாய் பாரினில் வலம் வந்தீர்கள்
பாரினில் கண்ட கனவு பலிக்கும் முன்
இவ் உலகினை விட்டுச் சென்றதேனோ?
நோயுற்ற எம்மை மடிதாங்கி பார்த்தீர்கள்
பெண்பிள்ளை இல்லையென்ற குறைதீர்த்து வைத்தீர்கள்
குடும்பச் சுமைதனை சிறு வயதில் சுமந்தீர்கள்
அவதார புருசர்களென நாம் அறிய முடியவில்லை
கடல் தாயின் கை பட்டு அவதாரம் முடிந்ததோ?
அண்ணன் தம்பியென்று பாசமொழி பொழிந்து
அண்ணன் சென்ற இடமெல்லாம்
தம்பியைக் கூட்டிச் சென்றது இதற்குத் தானோ?
உங்களின் மழலை மொழி மாற முன் காலனவன் கவர்ந்தானோ?
அண்ணன் தம்பியுடன் உற்ற நண்பர்கள் புடைசூழ- உன்
மடிமீது விளையாடத்தானே ஓடோடி வந்தார்கள்- அவர்களின்
அன்பினை, நட்பினை பொறுக்க முடியாமல்- உன்
கருவறையில் அணைத்தாயா?
எங்கே என் செல்வங்கள் கலகலத்த சிரிப்பும்,
அப்பா, அம்மாச்சியென்று அன்புடன் அழைக்கும் குரல்கள் தான் எங்கே?
தேடுகின்றேன், தேடுகின்றேன் விடைதான் கிடைக்கவில்லை
நீங்கள் சொல்லிச் சென்ற வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றது
எம் காதினில் பூமியில் மீண்டும் வந்து புன்னகைக்க முடியுமா?
நாம் தொலைத்த இன்பத்தை மீண்டும் பெற முடியுமா?
மலர்கள் உதிர்ந்து போனது காம்பு என்ன வாழ்வது?
உங்களின் பசுமையான நினைவுகளும்
உங்கள் பேச்சும், சிரிப்பொலியும் இன்றும் என்றும் உறைந்து நிற்கும்
எம் மனதினில் அழியாத ஓவியமாய்....
— அம்மா, அப்பா
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

