மரண அறிவித்தல்

In loving memory of
Sebamalai Mariyampillai
Age 75December 12, 1941 – February 9, 2017
- Born in
- Mannar
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் மணக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சூரிய கட்டைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை மரியாம்பிள்ளை அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபமாலை(இராசையாப் பரியாரி), அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற மத்தேசுப்பிள்ளை, ஆனாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சவுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி(ஆசிரியை தாழ்வுபாடு), ஜெயராஜசிங்கம்(ஜெயந்தன்- ஹற்றன் நஷனல் வங்கி, திருகோணமலை), சாந்தகுணசிங்கம்(ஜெனிற்றன்- பிரதேச செயலகம் மடு), காலஞ்சென்ற கமிலஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றெஜி ஜெயபாலன்(வேல்ட் விஷன்- கிளிநொச்சி), அன்ரனிற் சறோஜினி, றெஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தலேனால், கிறிஸ்தோப்பிள்ளை(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்), சறோஜா(ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர்), கத்தரீன்(குயின்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்), மனோறஞ்சிதம்(ஓய்வுபெற்ற கணக்காளர் ப.நோ.கூ.சங்கம்), சந்தாம்பிள்ளை(ஓய்வுபெற்ற விவசாய முகாமையாளர்), அந்தோனிப்பிள்ளை(முன்னாள் களஞ்சிய பொறுப்பாளர் ப.நோ.கூ.சங்கம்), செபஸ்ரியாம்பிள்ளை(முன்னாள் கிளை முகாமையாளர் ப.நோ.கூ.சங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறோன், சதுசனா, நிமேஸ், ஆன் சிமித்தா, டிலுஜன், லிசான் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-02-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சூரிய கட்டைக்காடு புனித செபஸ்ரியர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித செபஸ்ரியர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

