Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellamma Vairappan

In loving memory of

Sellamma Vairappan

Age 79April 23, 1939 – May 17, 2018

Born in
Kaithady West
Lived in
Navatkuli, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா வைரப்பன் அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் சீதேவி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தன் ஆரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைரப்பன் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகி, மாணிக்கம், பரமன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கண்ணன்(பிரித்தானியா), கண்ணகி(ஜெர்மனி), யோகராஜா(சுவிஸ்), கமலராணி(இலங்கை), தனலக்‌ஷ்மி(சுவிஸ்), ஆஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜி, ரவி, ஜெயந்தினி(சட்டத்தரணி), முரளிதரன், சிறிகாந்தன், நியூமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிறீபன், ஆரோன், டாறியா, டிலாறா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

ஆர்த்திகன், அரிஸ்ரோ, டொறினா, டியோன், யஸ்ரிவ், ஜெரேம், யாபேஷ், நகிஷா, நிஸானா, நயோமி ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி நல்லடக்க ஆராதனை 21-05-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அமிர்தா வீதி நாவற்குழியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊரியான் பொது மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.