மரண அறிவித்தல்

In loving memory of
Sellaththurai Jeyanantham
Age 63April 24, 1952 – February 3, 2016
- Born in
- Vadamaradchi
- Lived in
- Vadamaradchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஜெயானந்தம் அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
தனீபா(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுயதாசன் அவர்களின் அருமை மாமனாரும்,
சந்தோஷ், சகானா, சாதனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செல்வராசா(அவுஸ்திரேலியா), ராஜேஸ்வரி(இலங்கை), சாந்தகுமார்(அவுஸ்திரேலியா), ஜெயகுமார்(அவுஸ்திரேலியா), கமலேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரன்(லண்டன்), ஜெயகலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தெருமூடி மடத்தடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

