1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sellathurai Logeswaran
Age 59October 17, 1955 – January 11, 2015
- Born in
- Velanai West
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை லோகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
புன்னகை பூத்த முகமும்
உறவுகளை நேசிக்கும் குணமும்
நட்புப் பாராட்டும் தன்மையும்
எங்கள் உயர்வையே இலட்சியமாகக் கொண்ட
தங்கள் முகம் பார்க்காது உள்ளம் வாடுகிறதே!
விழிகள் எப்பொழுதும் தேடுகின்றனவே
என்று காண்போம் என்று மனம் ஏங்குகிறது!
பாசத்தின் இருப்பிடமாய் பொறுமையின் பொக்கிசமாய்
சுமைதாங்கியாய் எல்லோர்க்கும் நல்லவராய் நடந்தீர்!
பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர்
ஓராண்டு சென்றாலும் ஈரவிழி காயவில்லை!
ஏனோ இறைவன் இடைநடுவில் பறித்துவிட்டான்
அதனால் ஏங்குகின்றோம் தினமும்
குடும்ப விருட்சத்திற்கு நீராகி வேராகி நின்று நிழல்பரப்பி
துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய்
அடைக்கலம் தந்து வாழ்வாங்கு வாழவைத்த தெய்வமே!
எண்ணிய பொழுதெல்லாம் கண்ணில் நீர் கசிகிறதே
குடும்ப ஒளி விளக்கே! எங்கே சென்றாய்?
உணர்வால் உள்ளத்தால் எம்மோடு வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி எம் இதயங்களில் வாழ்கின்றீர்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
இன்றும் உன் நிழலாடும் நினைவுகளில் வாழும்
மனைவி, பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

