Aruthal

மரண அறிவித்தல்

Photo of Selvanayagi Thatparanathan

In loving memory of

Selvanayagi Thatparanathan

May 18, 2020

Born in
Thellipalai
Lived in
Vaddukottai, Mount Lavinia, Sydney

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு கல்கிசை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி தற்பரானந்தன் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தெல்லிப்பழையைச் சேர்ந்த முத்தையா சீதாங்கனி தம்பதிகளின் அன்பு மகளும்,

தற்பரானந்தன்(இளைப்பாறிய யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முகுந்தன்(யாழ்ப்பாணக் கல்லூரிப் பழைய மாணவர்) மற்றும் மயூரன்(கணக்காளர்- சிட்னி), சுகந்தன்(KFC- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலகிருஷ்ணன்(கண்டி), காலஞ்சென்ற சிவலிங்கம், சற்குணவதி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சரவணபவன், மதிவதனி மற்றும் வீரகுலசிங்கம்(ஆசிரிய ஆலோசகர்- விஞ்ஞானம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாதுரிதேவி(கொமன் வெல்த் வங்கி, சிட்னி), கிரிசாந்தி(தாதிய உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்திய சாலை) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஆதித்தன், அமுதா, அனுசா(சிட்னி), விஷ்ணுகன்(சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஐயனார் வீதி, சண்டிலிப்பாய் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் நவாலி வழுக்கையாறு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.