15ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sengamalam Visvanathar
Age 66January 19, 1929 – November 9, 1995
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Vannerikkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செங்கமலம் விஸ்வநாதர் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதினைந்து ஆண்டுகள்
ஆனதம்மா உமை நாமிழந்து
எமை வளர்த்த அம்மாவே
தென்றலாய் எங்கு சென்றாய்?
பரிதவிக்கும் எமைவிட்டு
பரலோகம் சென்றனையோ?
நல்லதொரு மனைவியாய்,
அம்மாவாய், மாமியாய்
அப்பம்மாவாய், அம்மம்மாவாய்
பூட்டியாய், உறவுகளின் பொக்கிசமாய்
எம்முடன் இருந்தாயே!
தாய் என்ற பெயர் தாங்கி
தந்தையின் வேர்தாங்கி தரணியில்
எமை மலர வைத்தவளே!
பாதக் கமலமே எங்கள்
பத்மா வதியே!
கைகளை நீட்டியே
வா என்றழைப்பாய்
அள்ளிக் கொடுப்பதில்
அன்னை நீயம்மா
புன்னகையுடனே புவனம் வருவாய்!
நோயுற்ற போதும் நீயுற்ற
துன்பம் நொடியில் மறந்தவளே!
எமைப் பிரிந்து போய்விட்ட
செய்தி இவ்வுலகில்
பொய்யாகிப் போய்விடாதோ?
எத்தனை வருடங்கள் எமைக்
கடந்து சென்றாலும்
எம் கண்ணின் மணியே
நாம் மறந்து போவோமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல முருகப்
பெருமான் அருள்நின்று
காக்க இறைஞ்சுவம் யாமே!
— மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

