1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Senthivel Thivakaran
Age 17June 27, 1997 – June 18, 2015
- Born in
- Thondaimanaru
- Lived in
- Thondaimanaru
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாறு 3ம் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செந்திவேல் திவாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் ஆருயிர் செல்வமே!
வாழ்வு என்ற பயணத்தில் கடந்ததுவோ பாதிவழி - தம்பி
போய்வருகின்றேன் அம்மா எனக்கூறி சென்றாய் ஐயா!
நிரந்தரமாய் உங்களை விட்டுப் போகின்றேன் அம்மா
என்று விடைசொன்னாயோ - மகனே!
உன்னை இன்நிலைக்கு ஆளாக்கியது
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லை இறைவனின் விதியோ?
வாகன வடிவில் காலனவன் வந்து
உன்னை எங்களிடமிருந்து பறித்தானோடா - தம்பி!
அம்மா அம்மா என்று
பட்டாம் பூச்சிபோல் சுத்தி திரிந்த நீ
உன் அம்மாவை தவிக்க விட்டு எங்கே ஐயா போனாயடா?
வில்லில் இருந்து விடுபட்ட கணைபோல்
செல்லக்கன்று பசுவிழந்த கதையாய் போச்சு உன் அம்மாவின் வாழ்வு
ஆண்டொண்று போனதென்ன மாண்டுபோன உலகினிலே
அன்பான அப்பாவைத்தேடி விண்ணுலகம் போனாயோ தம்பி !
எம் கண்கள் இங்கு பரிதவிக்க எம்மையெல்லாம்
அநாதையாக்கிவிட்டு எங்கு சென்றாயோ!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

