Aruthal

நினைவஞ்சலி

Photo of Shanmugaratnam Rajeshwaran

In loving memory of

Shanmugaratnam Rajeshwaran

Age 38March 4, 1972 – July 3, 2010

Born in
Kili Vaddakachchi
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வட்டக்கச்சி சில்வாவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா பிறம்ரனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரத்தினம் இராஜேஸ்வரன் அவர்களின் அந்தியேட்டி நினைவஞ்சலி

பத்து மாதம் உன்னைப்
பெற்றெடுக்கப்பட்ட துன்பம்
உன்னைக் கண்டவுடன்
என்னை விட்டுப் போனதையா!
எட்டி நடைபோடும் அன்னமாய்
எம்மைச் சுற்றிச் சுற்றி
வலம் வந்த கண்ணழகா!
யார் கண் பட்டதோ!
உன் விழி மூட
பாலூட்டும் போது பாசத்தை
மட்டும்தான் ஊட்டினேனையா!

உன்னுடன் பிறப்புக்கள் அழும்குரல்
உனக்குக் கேட்கவில்லையா?
உன்னுயிருக்கு பதிலாய்
எம்முயிர் போயிருக்கலாமேயையா!
நெஞ்சில் வாழ்ந்த நிலவாய்
நினைவுகளை விதைத்த உருவே
நீ மட்டும் பிரிந்து போனதேன்?
கண்ணில் உன்முகம் தோன்றியதேன்
காலமெல்லாம் உன்னை நினைத்திடவா...
பாசத்தை நினைவாகத் தந்து விட்டு
நீ மட்டும் போனதேனோ!

தந்தையே எங்களின் ஆருயிர் அப்பாவே...
விண்ணையே நோக்கி நீங்கள் விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மைக்காத்து நின்றீரே!!
கலங்கரை விளக்காய் நல்வழிகாட்டினீர்கள்
அன்புகாட்டி எம்மை அரவணைப்பீர்களே!!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டு
எங்குதான் சென்றீர்கள்.....
உங்கள் நினைவுகள் என்றும்
எம் உயிரில் உறைந்திருக்குமையா....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
தினமும் பிரார்த்திப்போமையா.....!

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 29-12-2010 புதன்கிழமை அன்று மதியம் 12.00 மணிமுதல் பி.பகல் 4.00 மணிவரை Clairport Place, 65 Claireport Cres, Etobicoke, ON MPW 6V5 என்னும் இடத்தில் நடைபெறும்.

அன்னாரின் பிரிவுத்துயர் கேட்டு நேரில் வருகைதந்தும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டும் ஆறுதல் கூறியவர்களுக்கும், அன்னாரின் பூதவுடலிற்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டும், மலர்வளையங்கள், மலா்மாலைகள் சாத்தியும் அஞ்சலி தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

(குறிப்பு: தனிப்பட்ட முறையில் அனைத்து உறவினர்கள், நண்பர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே இவ்வறிவித்தலை அழைப்பாக ஏற்று நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.)

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.