3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Singarayar Kirubairani
Age 72October 1, 1946 – June 27, 2019
- Born in
- Urumpiray
- Lived in
- Kili Vaddakachchi, Saint-Etienne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி Civic Center ஐ வதிவிடமாகவும், பிரான்ஸ் Saint-Étienne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிங்கராயர் கிருபைராணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மாவின் ஆன்மா இறைவனில்
மகிழ்ந்திருக்க மன்றாடுவோம்
தெய்வத்தின் மறுவுருவம் நீ
மீண்டும் பிறப்பொன்றிருந்தால்
உன் வயிற்றில் சேயாக வேண்டும்.
ஆண்டுகள் மூன்று உன்பிரிவு
அவனியில் கடந்தாலும்மாண்டு போன
தடயமில்லாமல் பவனி வருகிறாயம்மா
தினம் நினைவில்
தாயாக, தாரமாக, மாமியாக, பேத்தியாக,
எம்முள் நின்று வழிநடத்திக் கொண்டிருக்கும் அம்மா !
எந்தப்பக்கம் திரும்பினாலும்
செந்தளிப்போடு வரவேற்கும் உன்முகம்.
வெற்றுப்பரப்பில் அப்பா..
அனுதினமும் உன் மனதோடு
கைகோர்த்து நடப்பதாக உணர்கிறோம்.
தாரமாக வந்தென்னைமனிதனாக மீட்டெடுத்தாய்
என்னோடு பழகுவது பாவமென்று
விலகியோரையும் மீண்டு வந்து
பழகவைத்த பெருமை உந்தனது.
வேதமாக வந்தென்வாழ்வில் விளக்கேற்றினாய்
இருளில் என்னை தவிக்கவிட்டு
இன்று நீ வானில் நட்சத்திரமானாய்.
எல்லாமுமாய் இருந்தவள் நீ
இல்லாமல் நானிருக்கும் பொல்லாத காலத்தில்
மனதுக்குள் உன்னோடு...
மணிக்கணக்காய் பேசுவதில்
ஆனந்தமான ஆறுதல் தருகிறாய்.
என்றும் உங்கள் நினைவுடன்
கணவர் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

