மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Annaludsumi
Age 68March 15, 1950 – March 18, 2018
- Born in
- Usan
- Lived in
- Usan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உசனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அன்னலட்சுமி அவர்கள் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் முருகனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(பெரியதம்பி), செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, முத்துப்பிள்ளை ஆகியோரின் பெறாமகளும்,
சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
நிறஞ்சலா(நிறஞ்சி- லண்டன்), கிருபறாஜா(கிருபா- கனடா), கோகுலராஜ்(செந்தூரன்- லண்டன்), நிருபனா(நிரு- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவராசா(லண்டன்), மனோன்மணி(இந்திரா- கனடா), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மகேஸ்வரி, செல்வராசா மற்றும் தங்கராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சுதாகரன், பாலதர்சினி, காயத்ரி, சுதாகர், பார்த்தீபன், சகிலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விமலாம்பிகை(பேபி), தட்சணாமூர்த்தி, காலஞ்சென்றவர்களான கனகம்மா, விநாசித்தம்பி, சின்னம்மா, சிவகுரு, திருப்பதி, நல்லதம்பி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நிகேதன், நிருத்திகா, நிவாசன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
அஸ்ணவி, லவீனா, லக்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-03-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை 2B எல்விட்டிகல மாவத்தை கொழும்பு- 08 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 22-03-2018 வியாழக்கிழமை அன்று உசனில் உள்ள் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைதொடர்ந்து ஈச்சங்காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

