3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnathurai Katpagapillai
Age 79April 13, 1932 – November 27, 2011
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை கற்பகப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே
ஆண்டு மூன்று மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமம்மா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே!
உன் பிரிவால் துடிக்கின்றோம்
உன்னை நினைத்து நித்தம் கண்ணீர் வடிக்கின்றோம்
பட்டினியாய் நீ கிடந்தாலும்- எம்
பசி போக்கி வளர்த்தவளே! அம்மா!
துன்பத்தை நீ சுமந்தாலும் எமக்கு
இன்பத்தை ஊட்டி வளர்த்தவளே- அம்மா
மண்ணிலே மீண்டும் வந்து பிறவாயோ?
மறுபடியும் எம்மோடு கலந்து வாழ்வாயோ?
கண்ணீரைச் சொரிந்தபடி கலங்கி நிற்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

