1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnathurai Nantharuban
Age 37July 30, 1971 – April 16, 2009
- Born in
- Karaveddy
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதுன்னாலை தெற்குக் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ணை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நந்தரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், சின்னத்துரை(இலங்கை), காலஞ்சென்ற சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்,
சிவரூபன்(சவுதிஅரேபியா), யமுனா(சுவிஸ்), நளினி(இலங்கை), சிவாஜினி(சுவிஸ்), காலஞ்சென்ற சிவகெளரி ஆகியோரின் சகோதரனும்,
நிறைஞ்சாவின் அன்புக் கணவரும்,
நிரு, நிதர்சன், நிலானி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவநேசன்(சுவிஸ்), நாதன்(இலங்கை), காலஞ்சென்ற விக்னேஸ்வரன், சந்தானலட்சுமி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
தர்சனின் சித்தப்பாவும், நிஷானி, டிலானி, திருசன்(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
ஒரு கொடியில் மலராக உதித்த எங்கள் அண்ணா
பெருமை தன்னில் பூரித்து வாழ்ந்தோமே
பெற்றெடுத்த தாயாரும் சிறுவயதில் மாண்டுபோக
தந்தையது கடமைகளை செய்து காத்தாய்
உள்ளத்தில் கள்ளமில்லா உயர்குணத்து அண்ணா
வள்ளலாய் வாழ்ந்து எல்லோருக்கும் உதவினீர்கள்
உன் பரிவொன்றே போதுமென நம்பி நின்றோம்
வந்த பகை உந்தனுக்கு யாம் அறியோம்
பாறியதோ உங்களுயி்ர் பரிதாபமாகவே அண்ணா
மோசமிதை கேட்க வைத்தோ ஓடினீர்கள் ஐயோ
ஆண்டு ஒன்றாகி போய்விட்ட போதிலும்
எங்கள் மனம் உன் பிரிவை நம்ப முடியவில்லை
மனமதிர்ந்து நிலைகலங்கி பரிதவித்து கலங்குகின்றோம் அண்ணா
இறைவனோடு இரண்டறக் கலந்து ஆத்மா சாந்தி அடைவீராக....
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இன்று நந்தரூபனின் முதலாம் ஆண்டு நினைவுதினம் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
— சகோதரி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

