மரண அறிவித்தல்

In loving memory of
Sinniah Subramaniyam
Age 79September 13, 1937 – June 23, 2017
- Born in
- Inuvil
- Lived in
- Puliyangkoodal, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சுப்பிரமணியம் அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நீலாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சித்திராதேவி(இந்தியா), மணிமாறன்(கண்ணன்- கனடா), காலஞ்சென்ற மணிவண்ணன், மணிசேகரன்(இந்திரன்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மணிவாசகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை(நாகேஸ்வரி) பரமலிங்கம், ஞானேஸ்வரி சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபாலசிங்கம், சுபாகனி, விஜிதரா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேஷ், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான நடராசா, புனிதவதி, மற்றும் குமாரவேல், தவமணி, காலஞ்சென்ற பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2017 சனிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

