நினைவஞ்சலி

In loving memory of
Sivagnanam Lakshmi
Age 39October 7, 1942 – January 25, 1982
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெடுந்தீவை பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானம் லட்சுமி அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிரிந்த உயிர் துறந்த நிலை
பெருந்திரையில் மறைந்த நிலை
கரு விழிக்குள் கூறுகட்டி
கருவறையில் உரமிறைத்தாய்
கொடுந்துயரை நீயருந்தி
விடியும்வரை விழி திறந்து
விடிவதனை பரிசளித்தாய்
விழியதனை மூடிய நீ
விட்டுச் சென்றாய் சோகமதை
மடையுடைத்து விழியதனால்
மனதருவி பாய்கிறதே
மௌனமடை யுடைக்காமல்
மௌனிக்கும் மாயமென்ன
பட்டினியை நானறியேன்
பசிதனை நீயருந்தி
பசி தீர்த்தாய் பாசத்தால்
கொடி அறுந்து போனதென
கொள்ளவில்லை மனமோய்து
புதுப் புண்ணில் கள்ளிப்பால்
மனக்கண்ணில் பாய்ந்ததென்ன
கரமணைத்த காயங்கள்
தேகத்திற் காயவில்லை
கல்லறையிற் கார்த்திகைப்பூ
வைப்பதிலே இலாபமென்ன
கண் விளக்கு அணைந்த பின்னே
படைப்பதிலே இலாபமென்ன
போலிப்பாசத்தை பொழிவதிலே இலாபமென்ன
புகழ் பூத்த உன் புகழை
மனதுள்ளே புகழ்கின்றோம்
ஒரு கையில் பல விரலாய்
நீ எம்மை நோக்கவில்லை
ஒரே விரலாய் அனைவரையும்
அணைத்த அன்பை என் சொல்வேன்
பயிர் விழைத்த பாசத்தை
பாடையிலே கண்ட கண்கள்
உயிர் துறந்து நிற்கிறதே
உவமானம் இல்லையம்மா
இன்னமும் உன் நினைவால்
ஊற்றுகின்றோம் கண்ணீரை
உதிப்பவன் உறங்கினாலும்
எம் மனது உற்காது
உன் வாழ்த்து வேண்டுமம்மா
உரத்துக் கேட்கின்றேன்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் குடும்பத்தினர்.
— சின்னத்துரை சிவஞானம்(கணவர்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

