மரண அறிவித்தல்

In loving memory of
Sivaguru Nallama
September 9, 2016
- Born in
- Alaveddi
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் தெற்கு உடுவில் புதுமடத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு நல்லம்மா அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கறுவல் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா அன்னாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மலிங்கம், ஜெயநாயகி, செல்வநாயகம்(சுவீடன்), பரராஜசிங்கம், தவமலர், நாகேஸ்வரி, நாகதேவி(பெல்ஜியம்), நல்லசிவம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினம், கெளரிதேவி, ஜீவகுலநாதன், கனகநாயகம், இராஜேந்திரம், ராணிமலர், கமலேஸ்வரி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

