மரண அறிவித்தல்

In loving memory of
Sivapakkiyam Sundaralingam
Age 82September 9, 1937 – May 14, 2020
- Born in
- Nainativu
- Lived in
- Thirunelveli, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சுந்தரலிங்கம் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கலாமோகன்(பிரான்ஸ்), ஜெயமோகன்(சுவிஸ்), குலமோகன்(கனடா), வசந்தி(கனடா), மலர்விழி(ஜேர்மனி), இராஜ்மோகன்(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
சுகுணா, ஜெகசோதி(விமலி), கலாநிதி, சிவசுப்பிரமணியம், இளங்கோவன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், மாசிலாமணி, சரஸ்வதி, நீலாம்பிகை மற்றும் சிவானந்தன், தனலெட்சுமி, திரவியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்செனறவர்களான சோமசுந்தரம், அருணகிரி மற்றும் லலிதாம்பாள், பரராசசிங்கம், பிரிகிற்றி, காலஞ்சென்ற கனகம்மா மற்றும் கோபாலசுந்தரம்(கனடா), குலசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமாரசாமி, சரஸ்வதி, சோதீஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுவேதா, சுவேதன், பிரணவி, பைரவி, அட்சயா, அபிமன்யு, அருவி, ராதினி, நரேன், அனோஸ்கா, பிரசன்னா, பிரவீந், பிரம்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2020 சனிக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham என்ற முகவரியில் நடைபெற்று, அதனை தொடர்ந்து Highland Hills - 12492 Woodbine Ave, Gormley, ON L0H IG0 என்ற முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

