1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivapiragasam Thavamanidevy
Age 69November 15, 1939 – April 1, 2009
- Born in
- Mullai Puthukkudiyiruppu
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை இறுதி வசிப்பிடமாகவும் கொண்டு அமரத்துவம் அடைந்த சிவப்பிரகாசம் தவமணிதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னாரின் 1ம் ஆண்டு திதியும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் இலண்டனி்ல் உள்ள அவரது இல்லத்தில் 22.03.2010 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
எங்களைப் பெற்றெடுத்த குலவிளக்கே
ஓராண்டு ஓடி விட்டதம்மா
நாமோ நம்பவில்லை!
தந்தை முகம் அறியோம்,
தந்தை பாசம் அறியோம்,
தந்தை உதவி அறியோம்
உங்கள் முகம் பார்த்து
உங்கள் பாசம் கண்டு நாம் வளர,
உங்களை உருக்கி எங்களை வளர்த்து
நாம் வளர்ந்து இலண்டனில் வாழ
தாய்நாட்டை விட்டு பெற்றெடுத்த பிள்ளைகளுடன்
பெருமையுடன் வாழ எண்ணி
பத்து வருடங்கள் இலண்டனிலே நீங்கள் வந்து
பட்டதுயர் போதுமென்று
விண்ணுலகம் போய்விட்டீரே!
பெற்றெடுத்த பிள்ளைகளை விட்டுப் போகமுடியாமல்
உங்கள்மூச்சு திணறியதும்,
உங்கள் கண்கள்கூட இறுதி நேரத்தில்
ஒரு தடவையேனும் பெற்றெடுத்த பிள்ளைகளின்
முகம்பார்க்க வேண்டுமென்று ஆங்காங்கே சுற்றி சுழன்றதும்
எங்கள் நெஞ்சில் நெருப்பாய் எரிகின்றது.
எங்கள் தெய்வமே எப்படித்தான்
எம்மை மறந்து விண்ணுலகம் போனீரோ?
நாமோ உங்கள் முகம் காணாமல்
நடைப்பிணம் போல் வாழுகின்றோம்.
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

