Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivasamy Senthamilchellvi

In loving memory of

Sivasamy Senthamilchellvi

Age 86January 29, 1932 – September 25, 2018

Born in
Velanai North
Lived in
Kantharmadam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி செந்தமிழ்ச்செல்வி அவர்கள் 25-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசாமி(கவிஞர் தில்லைச்சிவன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தெய்வச்சிலை, தயாபரன்(ஓய்வுநிலை நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர், விகடன் பிறிண்டர்ஸ்- கொழும்பு), பகீரதன்(சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பி.ஐ.உ ஆணையாளர் அலுவலகம்- யாழ்ப்பாணம்), பார்த்தசாரதி(ஆசிரியர், தி/கிண்ணியா முஸ்லீம் மகாவித்தியாலயம்), கிருபாகரன்(அதிபர், யா/வேலணை மத்திய கல்லூரி), அறிவரசி(லண்டன்), அன்பரசி(ஆசிரியை, யா/வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செவ்வேள், குமரவேள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சங்கவதியம்மா, பரராசசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெகநாதன்(அபிராமி களஞ்சியம், பரமேஸ்வரா சக்தி), ஞானசக்தி, சந்திரவதனி(ஆசிரியை யா/வைத்தீஸ்வராக்கல்லூரி), மதிவதனி(ஓய்வுநிலை ஆசிரியை), றமனி, ஜெயராசசேகரம்(லண்டன், Dr. கணேசலிங்கம்(யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராணி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற கண்மணிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகலியும்,

தயாளன், குணாளன்(இத்தாலி), காலஞ்சென்ற மணாளன், சீராளன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

தேவதா ரதீஜன்(கட்டார்), தயானி(மாணவி, யாழ். பல்கலைக்கழகம்- விஞ்ஞான பீடம்), நர்மதா கலாமோகன்(சட்டக்கல்லூரி- கொழும்பு), Dr.விச்வநேத்திரன்(யாழ் போதனா வைத்தியசாலை), நிவேதா(Scribe on time Pvt Ltd Hr), வைகுந்தன், பவந்தி, சந்திரகாசன், பிரதீஷா, சிவசங்கர்(CMC Engineering Pvt Ltd), சிவமைந்தன், தேனுகா, தீர்த்தா(லண்டன்), திரிஷா(லண்டன்), வினிசன்(லண்டன்), தேவந்தி, திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அப்ஸரா மீனாட்சி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 45/1,
அம்மன் வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.