மரண அறிவித்தல்

In loving memory of
Sivasoruban Sivapatham
Age 56January 3, 1962 – March 31, 2018
- Born in
- Colombo
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி சாவகச்சேரியைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசொரூபன் சிவபாதம் அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
France Limoges பல்கலைக்கழகத்தில் கற்றவரான இவர் உணவுப்பரிசோதகராக தேர்ச்சி பெற்று Disney Land Paris இல் நீண்ட காலமாக கடமையாற்றியவர்.
அன்னார், கந்தையா சிவபாதம்(Senior Finance Executive- Sterling Winthrop LTD Sri Lanka) லக்சுமி சிவபாதம்(Junior Vice Principal- சைவ மங்கையர் கழகம்) தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சாமியையா(தொழிலதிபர்) தனலக்சுமி சாமியையா தம்பதிகளின் அன்புமிக்க மருமகனும்,
ரஜனி சிவசொரூபன் அவர்களின் அன்புமிகு கணவரும்,
சக்திசொரூபன்(Bobby), நிருத்தசொரூபி தர்மகுலேந்திரன், நாதசொரூபன், அனந்தசொரூபன் ஆகியோரின் அன்புக்குரிய சகோதரரும்,
துணைவியார் ரஜனி சிவசொரூபன் வழிவந்த மச்சான்மார், மைத்துனிமார்களின் பாசமிகு மைத்துனரும்,
பெறாமகன்மார், பெறாமகள்மார்களின் பாசமிகு சித்தப்பாவும்,
மீனா சக்திசொரூபன், தர்மகுலேந்திரன், தர்சினி நாதசொரூபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சக்தியாயினி, சாரங்கன், ஜோதி, நதர்சன், சொருஷன், சத்தியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
தேசிகன், இளமதி, திருபவன் ஆகியோரின் அன்புமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

