31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Somasuntharam Rajamohan
Age 58October 12, 1957 – June 21, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Vaux-Sur-Seine
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே !
உற்றார் உறவினர்களிற்கு நற்பண்பை காட்டியதுடன்
உங்களை நம்பி நடப்பவர்களிற்கெல்லாம்
எதையும் செய்யத் துணிந்த கருணைக்கடலே!
வாழ்க்கை என்ற வசந்த காலம் வரும்போதே- உங்களை
வலிக்க வலிக்க வாரி அணைத்துக் கொண்டானே அந்த இறைவன்
வலி தாங்க முடியாமல் நாம் வாழ்நாள் முழுவதும்
புழுவாக துடிக்கப் போறோம்
சட்டென வந்த காலன் சத்தங்கள் எதுவுமின்றி
சடுதியாய் உங்கள் உயிரை ஏன் தானோ?
எங்கு தான் எப்படியோ! எடுத்துச் சென்றான்
பத்திரமாய் உங்களை பாதுகாக்க முடியாமல்
சத்தியமாய் பாவிகளாய் இப்பாரினிலே பரிதவிக்கின்றோம்
உங்கள் ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மக்கள், சகோதரர்கள்.
— சாந்தகுமாரி(சாந்தி - மனைவி)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

