10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sriranjan Gunanithi
Age 33March 30, 1973 – December 9, 2006
- Born in
- Analaitivu
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிறிரஞ்சன் குணநிதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
"போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானாள்”
அன்பும் பண்பும் ஆற்றல்கள் பலவும்
அள்ளிக்கொடுக்கும் தாராள மனமும்
துன்பம் துடைக்கத் துணைபோகும் தோழமையும்
தூங்காமற் பகலிரவாய்த் தொண்டுசெய்யும் துடிப்பும்...
பாசத்தில் அன்னையாய் பணிவிடையிற் தாதியாய்
சித்தம் குளிரத் தினம் சேவை செய்யும் பக்குவமும்
பண்புடன் குடும்பத்தைப் பராமரித்த அழகும்
என்னென்று இயம்புவது இப்புவியில் நாமிதனை...
எண்ணில் அடங்காத நற்குணங்கள் அத்தனைக்கும்
ஏகநாயகியாய் இன்புற்று வாழ்ந்த உனைக்
கண்ணிமைக்கும் நேரத்திற் கவர்ந்து சென்ற காலனின்
கருணையற்ற செயலால் கலங்குதே எங்களுள்ளம்...
ஆண்டுகள் பத்தென்ன... பத்தாயிரமானாலும்
அன்பினில் இணைந்த நெஞ்சம் அணுவளவும் மாறாதே!
வேண்டும் வரமெல்லாம் எமக்கொன்றே! உங்கள்
ஆத்மா சாந்திபெற ஆண்டவனருள் புரிவாராக!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
உமது நினைவுகளை என்றும் நெஞ்சினில் சுமந்தபடி.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

