Aruthal

மரண அறிவித்தல்

Photo of Stanislaus Jesudasan Theopillai

In loving memory of

Stanislaus Jesudasan Theopillai

Age 75September 2, 1942 – August 2, 2018

Born in
Naranthanai
Lived in
Colombo, Sillalai, Norway, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, யாழ். சில்லாலை, நோர்வே, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரனிஸ்லஸ் யேசுதாசன் தியோப்பிள்ளை அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியோப்பிள்ளை றெபேக்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கபிரியேற்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி லோறா(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

யொகித்தா பமிலா(லண்டன்), சார்வியா கசிலா(லண்டன்), காலஞ்சென்ற அன்ரன் வினோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பீற்றர் இம்மனுவேல், அன்ரன் அருள்நாயகம்(இலங்கை), சறோசா(இலங்கை), றோசறி(இலங்கை), பற்றிமா(இலங்கை), மதுரநாயகம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

டென்ஸ்ரன் றுபேஸ் மரியநாயகம்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-08-2018 புதன்கிழமை 10-08-2018 வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் பி.ப 06:30 மணிமுதல் பி.ப 08:30 மணிவரை H L Hawes & Son Ltd, 106 Tanners Lane, Ilford IG6 1QE, UK எனும் முகவரியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

பின் 11-08-2018 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை 132 Quebec Road, Ilford, IG2 6AP, UK எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் மு.ப 10:00 மணியளவில் St Teresa's R C Church, Brook Road, Ilford IG2 7JA, UK ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, Manor Park, London E12 5DQ, UK எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.