Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Subramaniam Kulasegarampillai

In loving memory of

Subramaniam Kulasegarampillai

Age 72January 25, 1945 – May 13, 2017

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Pungudutivu 3rd Ward

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, சுவிஸ் Lugano ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் குலசேகரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குல தீபமே!
எங்கள் குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய
குன்றினில் ஏற்றிய தீபமே!

எமக்குக் கூறாமல் எமைவிட்டு மறைந்ததேனோ
ஆண்டொன்று சென்றாலும் ஆறிடுமோ எம்துயரம்
வருடமொன்று கடந்தாலும் மாறிடுமோ உங்கள் நினைவு
தன் வாழ்வுக்கு வழிதேடி எம் வாழ்வுக்கு வழிகாட்டியவரே
நாம் வாழ்வாங்கு வாழும்போது எமது வாழ்வைப் பாராமல்
வானுலகம் சென்றதேனோ

கடந்துவிட்ட ஒருவருடத்தில் கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து கண்ணீர் வடிக்குதையா

கூடுகலைந்த குருவிகளாய் நாடுவிட்டு இங்கு வந்தவர்களுக்கு
ஆரம்பத்தில் ஆதரவு அளித்ததாக அனைவரும் கூறுகின்றனர்
அதைக்கேட்க மனம் குளிருதையா எனினும் உனை நினைத்து
மனம் தவிக்குதையா

என் செய்வோம் நாங்கள் இறைவனைக் கண்டதில்லை
எமக்கு மனித வடிவில் வந்த தெய்வம் நீங்கள் ஐயா
பண்பின் சிகரமாய், பாசமுள்ள துணைவராய்,
தந்தையாய், மாமாவாய், தாத்தாவாய்,
உறவினராய், நண்பராய் எமக்கு வழிகாட்டினீரோ
என் செய்வோம் நாங்கள் எமது மனதில்
என்றும் நிறைந்திருப்பீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா என்றும் எங்களை
வழிநடத்தும்.

எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
அன்புத் தெய்வத்தின் பொற்பாதத்தில்
மலர்தூவி மலர் அஞ்சலி செய்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

எங்கள் அன்புத் தெய்வத்தின் 1ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 05-05-2018 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Centro Presenza Cristiana, Via Terzerina 1, 6963 Lugano, Switzerland எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · May 14, 2017மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.