Aruthal

மரண அறிவித்தல்

Photo of Subramaniyam Annapillai

In loving memory of

Subramaniyam Annapillai

Age 91April 23, 1927 – June 18, 2018

Born in
Kili Punakari
Lived in
Thirunelveli, Colombo Dehiwala

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி பூநகரி செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி கிழக்கு, கொழும்பு தெஹிவளை அல்பேட் பிளேஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அன்னப்பிள்ளை அவர்கள் 18-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகசிங்கம்(கொழும்பு), காலஞ்சென்ற முத்துலிங்கம், தனலட்சுமி(கொழும்பு), வன்னியசிங்கம்(அவுஸ்திரேலியா), தவமணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி, கனகரட்ணம், சிவசுந்தரம் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பவதி(கொழும்பு), செல்வநாயகி(அவுஸ்திரேலியா), வேலாயுதபிள்ளை(கொழும்பு), மஞ்சுளா(அவுஸ்திரேலியா), இரவீந்திரராஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருபன்- றம்மிதா(அவுஸ்திரேலியா), றஜினி- சிவகுமார் (ஐக்கிய அமெரிக்கா), லாலாஜினி- மணிவண்ணன்(கொழும்பு), ஜமுனா- சிவாகரன்(கனடா), கேதீசன்- கிருபாநிதி(கொழும்பு), கோகிலவதனி- தயாளன்(லண்டன்), அபிராமன்- கிரிஜா(அவுஸ்திரேலியா), பிரதீபா(ஐக்கிய அமெரிக்கா), கணதீபன்(ஐக்கிய அமெரிக்கா), லக்‌ஷன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சந்தோஷ், சாகித்தியன், டிலுக்சியா, அதிஸ், அஜிந்த், சாகித்தியா, சர்மிகா, டிஷாணி, டெய்சிகா, சோபிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 44A அல்பேட் பிளேஸ், தெஹிவளை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.