மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Narabalasingam
Age 82August 7, 1935 – August 17, 2017
- Born in
- Koddadi
- Lived in
- Colombo Wellawatta, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, லண்டன் Colindale ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நரபாலசிங்கம் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மனோன்மணி(பூவம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவண்ணன்(மணி- லண்டன்), நளாயினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன்(சச்சி), தையல்நாயகி(ஆச்சி), மற்றும் லோகநாயகி(இராசாத்தி- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(அப்பு), Dr. தவீந்திரன்(இராசன்- ஓமான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷியந்தி(துஷி), தர்மராஜா(இராசன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமுதசாகரன், ஆனந்தசாகரன், ஞானசாகரன், யோகசாகரன், காலஞ்சென்றவர்களான அருள்சாகரன், கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபா, சண்ஜேய், சோழன், புருஷோத் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

