மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Tharmalingam
Age 95July 8, 1922 – July 21, 2017
- Born in
- யாழ் சுன்னாகம் கிழக்கு
- Lived in
- யாழ் சுன்னாகம் கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தர்மலிங்கம் அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானந்தகுமார்(திருகோணமலை), கோணேஸ்வரன்(பிரான்ஸ்), கதிர்காமநாதன்(சுன்னாகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சற்குணதேவி(திருகோணமலை), குமுதா(பிரான்ஸ்), அனுசியா(சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, ஐயாத்துரை, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சங்கவி, சிவானுதன்(திருகோணமலை), நிதர்சினி, யதுசன், தாரணி(பிரான்ஸ்), கயூதரன், கஜந்தன், கஜீதா, கிரிகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
53/22, கந்தையா வீதி,
சுன்னாகம் கிழக்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

