1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sulojanadevi Nagulananthan
Age 50November 3, 1969 – March 14, 2020
- Born in
- Suthumalai
- Lived in
- Pickering
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுலோஜனாதேவி நகுலானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு ஒரு நொடிப் பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை
ஓர் ஆண்டு கனப்பொழுதில் உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த
உருவத்தில் நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன் என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய் அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
பொய்யான தகவலாய் இருக்க கூடாதா
என்று எம் மனம் ஏங்கியதுண்டு
உங்கள் பிரிவால் நிலை குலைந்து நிற்கின்றோம்
அந்த இறைவனுக்கு நன்றியம்மா
நீங்கள் என்றென்றும் எங்கள்
இதயமதில் இணைபிரியா வாழ்வீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— நகுலானந்தன்(கணவர்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

