Aruthal

மரண அறிவித்தல்

Photo of Tamian Abraham

In loving memory of

Tamian Abraham

Age 90October 30, 1930 – February 21, 2021

Born in
Puloppalai
Lived in
Mathagal, Essen

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், மாதகல் சகாயபுரம், எசன் ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தமியான் ஆபிரகாம் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தமியான் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி மரியை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அருளம்மா(சறோசா), அருளானந்தம்(அன்ரன் - Yverdon, சுவிஸ்), யோசப்(ராஜன் - எசன், ஜேர்மனி), டொறத்தி(முன்னாள் ஆசிரியை யாழ் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி- சுவிஸ்), பெல்சியா யேசாந்தினி(பிரித்தானியா), மேரி புளோறன்ஸ்(எசன், ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பெனடிற் ஜெகராசா(மாதகல்), யுவான் மேரி புஸ்பராணி(சுவிஸ்), ராசன்(குரூஸ்- லண்டன்), அன்ரன் விஜயகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இருதயம், ஞானப்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அடைக்கலம், இராயப்பு, சவிரிப்பிள்ளை, காலஞ்சென்ற மேரிப்பிள்ளை, அன்னம்மா, ஆரோக்கியம், லூர்த்தம்மா(சந்திரா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிறின்சின்(நிசானி), பிரவித் ஸ்ரெபனி, பொயிற்ச்ஹறி, சுஜனி, றொசில், ரைரோன், கரோலினா, நிதுஷா, சஜித்தா, நிதுசன், டென்சி, டேணுகா, டெபோறா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · March 23, 2021நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.