மரண அறிவித்தல்

In loving memory of
Thambithurai Bernathed
Age 78February 10, 1937 – December 20, 2015
- Born in
- Navanthurai
- Lived in
- Navanthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை பெர்ணதேத் அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இன்னாசிமுத்து, பெற்லோனியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நீக்கிலான், மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற புஸ்பம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
செபஸ்தியாம்பிள்ளை, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரெலா(இலங்கை), சாள்ஸ்(பிரான்ஸ்), ஏஞ்சலா(இலங்கை), விமலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அமலதாஸ்(இலங்கை), ரதினி(பிரான்ஸ்), மில்ரன்(இந்தோனேசியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எமல்சன்(இலங்கை), எசாயினி(இலங்கை), அமல்சலா(இலங்கை), யேசுலா(இலங்கை), சாரதன்(பிரான்ஸ்), தேனுஜா(பிரான்ஸ்), பிரசாந்(பிரான்ஸ்), சூரியா(பிரான்ஸ்), ஸ்ரெபனி(இலங்கை), மிதர்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதித் திருப்பலி 21-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நாவாந்துறை புனித பரலோக மாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என் உயிர் அம்மா
ஆண்டவன் எனக்கு கொடுத்த
அன்புத் தாய் நீதானம்மா
அனுதினமும் என்னைக் கண்நோக்கி
அரவணைத்து காத்த தெய்வமும் நீதானம்மா
துன்பம் என்னை சூழ்ந்திட்ட போதிலும்
துயர் துடைத்து காத்த அன்னை நீதானம்மா
தூயவர் பாதம் பணிந்திடச் செய்த
தாயவளும் நீதானம்மா
தொட்டிலிலே தூங்க வைத்து
தாலாட்டுப் பாட்டொன்று பாடி
துயில் கொள்ளச் செய்தவளும் நீதானம்மா
தூரத்து நிலாவைக் காட்டி
சோறூட்டிய தாயும் நீதானம்மா
பள்ளிப்பருவமதில் பக்குவமாய்
பாடம் படித்துவா என்று
சொல்லிய தாயும் நீதானம்மா
கடும் நோய் வந்திட்ட போதிலும்
கலங்காமல் கடவுளிடம் மன்றாடி
கனிவான வாழ்க்கையை வாழச் செய்த
அன்னையும் நீதானம்மா
நீ சென்ற இடம் தன்னில்
நிர்மலன் கருணை வேண்டி
நிலையான மோட்சம் சேர
நித்தமும் இறைவனை வேண்டுகின்றோம்!
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

