நினைவஞ்சலி

In loving memory of
Thampirasha Balenthiran
October 14, 2016
- Born in
- Commantharai
- Lived in
- Commantharai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா பாலேந்திரன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
கைப்பிடித்த காலம் தொட்டு கடிந்து பேசிடாமல்
கண்ணுக்குள் வைத்து
கடமையெல்லாம் புரிந்திட்ட கடவுளே!
என் முன்னேற்றத்திற்கும் சேவைக்கும் ஆதரவாக
இன்முகத்துடன் உறுதுணை புரிந்த துணையே!
என் இன்பங்கள் துன்பங்கள் பகிர்ந்திடவென
பிரம்மனால் படைக்கபட்ட உயிரே!
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே இருப்பேன் என்று கூறியது
பொய்யாக்கிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே! என் அன்புக் கணவரே!
கனவாகிப் போனது என் இனிய வாழ்க்கை
நினைவாக வாழுகிறீர் நெஞ்சக் கோயிலிலே!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 26-11-2016 சனிக்கிழமை அன்று இரவு நடைபெற்று, 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் அஸ்தி கரைக்கப்பட்டு, பின்னர் வீட்டுக்கிருத்திய கிரியை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
கொம்மந்தறை,
உடுப்பிட்டி வடக்கு,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

