31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Thananjayan Dharmarajah
Age 59March 11, 1958 – March 30, 2017
- Born in
- Trinco Uppuveli
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனஞ்சயன் தர்மராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும் –அண்ணா
உந்தன் அன்பொழுகும் தங்க முகம் மறந்தோமில்லை!
நின்றாடும் நினைவு நிழலாகத் தொடர்கின்றதே!
ஆத்மா அழியாதென்று அன்று நாம் அறிந்திருந்தும்
ஆற முடியவில்லை "அண்ணா" உன் பிரிவு தனை!
ஆழமாகப் பார்த்தால் அண்ணாவின் ஆத்மா
என்றென்றும் நிலைத்திருக்கும் நின்றெம்மைக் காத்திடுமே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
எங்கள் குடும்பத்தலைவர் தனஞ்சயன் தர்மராஜா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து எம்முடன் இருந்து சகல உதவிகள், ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உலகநாடுகள் பலவற்றிலிருந்தும் தொலைபேசி, மினஞ்சல், மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், திருகோணமலை, இங்கிலாந்து, கனடா நாடுகளில் உள்ள எமது சகோதர, சகோதரிகள் வீடுகளுக்குச் சென்று அனுதாபம் தெரிவித்து உதவிகள், ஒத்துழைப்புக்கள் நல்கிய பணிப்பாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Kennedy Convention Centre, 1199 Kennedy Rd, Scarborough, ON M1P 2L2, Canada எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

