மரண அறிவித்தல்

In loving memory of
Thapothini Gowriram
Age 46September 27, 1971 – August 28, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் சந்தி கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தபோதினி கெளறிராம் அவர்கள் 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், அன்னமுத்து தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற படைவீரசிங்கம், தவமணிதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கோடீஸ்வரன், சரோஜினிதேவி தம்பதிகளின் கனிஷ்ட மருமகளும்,
கோடீஸ்வரன் கெளறிராம்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோகீசன்(பிரான்ஸ்), நிதிஷன்(பிரான்ஸ்), தனுஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமித்திரன்(இத்தாலி), சுபோதினி(இந்தியா), உதயகுமார்(கோகுலன்- பிரான்ஸ்), ஷாரிகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளறிதரன்(லண்டன்), கெளறிதாஸ்(லண்டன்), சுவர்சலாஇலங்கை), யாழினி(கனடா), ஷாமினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுசிலாதேவி அருளானந்தம் (முன்னாள் கல்வி துறை தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), மனோரவி(முன்னாள் குடும்பநல சேவையாளர்- சாவகச்சேரி மாவட்ட வைத்தியசாலை), காலஞ்சென்ற ராதா அருளானந்தம்(முன்னாள் சிரேஷ்ட தாதியர் போதனா ஆசிரியர்- யாழ். தாதியர் பயிற்சி கல்லூரி) ஆகியோரின் அருமை செல்ல மகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

