1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thayakaran Subatherahdevi
May 17, 2009
- Born in
- Kili Nallur
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநல்லூர் சிவன் புது வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தயாகரன் சுபத்திராதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அக்கா உனது
ஓராண்டு வெற்றிடம்
ஓராயிரம் வரிகளால்
நிறைந்து வழிகிறது
சிதைகளின் நடுவில்
போர் நடந்த நாளில்
உன்முகம் மறைந்து போனது
அது மறையாது வாழ்கிறது
எம் இதய அறைகளில்
ஒரு தாயின் கருவறையை
நீயும் நானும்
பகிர்ந்து கொண்ட உறவு
அந்த கறுத்த நாட்களில்
கரைந்து போனது
கட்டிய கணவனும்,
நீ தொட்டிலில் வளர்த்த பிள்ளைகளும்,
ஈரவிழிகளுடன் உன் பிரிவுத்துயரில்
அழிவது தெரிகிறதா?
தென்றல் வீசிய வாழ்க்கையில்
புயல் நுழைந்ததேன்?
கன்றுகளை விட்டு
தாய் சென்றதேன்?
விதி வரைந்த கோடுகளுள் நின்று
விம்மி அழுகின்றோம்
ஆறுதல் அமைதிக்காய்
ஆண்டவனை பிராத்திக்கிறோம்.
— என்றும் உன் பிரிவுத் துயரில் தயாகரன்(கணவன்), சாருயன், தசானிகா, கிருத்திகா(பிள்ளைகள்),மகேந்திரன்(தந்தை), வண்ணமலர்(தாய்), சுரேஸ்குமார், சிவகுமார், மயூரன்(சகோதரர்கள்), சுதர்சினி(சகோதரி),தங்கவடிவேல்(மாமன்), தேவமலர்(மாமி), சுபாஸ்கரன்(மச்சான்), தயாளினி, சுதாஜினி(மச்சாள்), மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

