Aruthal

6ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Thayanithi Srithar

In loving memory of

Thayanithi Srithar

Age 54November 19, 1961 – July 2, 2016

Born in
Elalai
Lived in
Elalai, Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தயாநிதி ஸ்ரீதர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஆறு கடந்தாலும்
உங்கள்நினைவுகள்
உள்ளத்தை விட்டு அகலாது அம்மா....

எதிர்பார்க்கவில்லை உங்கள் பிரிவை
வாழ்கின்றோம் உங்கள் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உங்கள் பிரிவால்
வாழ்கின்றோம் உங்கள் நிழலாய்

தேடி வந்து அன்பு செய்தாய் அம்மா
நாடி வந்து ஏற்றுக்கொண்டாய் அம்மா
நடுவழியில் விட்டு ஒரு கனவுபோல்
மறைந்து விட்டாய் அம்மா...

விழி போல நீயிருந்தாய் என்றும்
நீர் சிந்தும் விழியானோம் இன்று!
பூவுலகத்தில் சொர்க்கத்தை நீ தந்தாய் அன்று
விண்ணுலகில் சொப்பனமாய்
ஏன் சென்றாய் அம்மா இன்று..?

உன்னோடு இருந்த அந்தஇனிமையான பொற்காலங்களை
இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது வாழ்க்கையில்
எதை இழந்தோம் என்று......

நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
பாசம் என்ற பந்தத்தை அள்ளிதந்து
பாதியில் ஏன் நிறுத்தி சென்றாய்
நீயில்லாமல் நாங்கள் படும் அவலநிலை
யார் அறிவார்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைனைப் பிரார்த்திக்கின்றோம்.

திருகோணமலையில் உள்ள அனாதை குழந்தைகளுக்கு அன்னாரின் நினைவாக கடந்து மூன்று ஆண்டுகளாக மதியபோசனமும் வழங்கப்படுகிறது.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.